சரத்குமார் வீட்டில் விஷேசம்.. ராதிகா கொடுத்த கேப்ஷன்! ட்ரெண்டிங் வீடியோ

ராதிகா சரத்குமார் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சரத்குமார்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார்.

இவர் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இருந்தாலும் சினிமா என பார்க்கும் பொழுது 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார் தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார் மற்றும் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் விஜயிற்கு அப்பாவாக நடித்திருப்பார்.

வைரலாகும் காணொளி
இந்த நிலையில், சரத்குமார் கடந்த 2001 ஆம் ஆண்டில் நடிகை ராதிகாவை சரத்குமார் மறுமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்போது மகன் ஒருவரும் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் பிஸியாக இருக்கும் ராதிகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், நேற்றைய தினம் தன்னுடைய அன்பு கணவர் சரத்குமாருடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

இதன்போது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து “ ஒரே தொட்டியில் இரு செடிகள், எப்போதும் உன்னை நேசிக்கிறேன்” என்ற சீன பழமொழியை கேப்ஷனாக கொடுத்து காணொளியொன்றையும் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை பார்த்த இணையவாசிகள் திருமண நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *