Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 06, 2024 – செவ்வாய்க்கிழமை

மேஷம்:

இன்றைக்கு உங்களுக்கு வெற்றிக்கான நாளாக அமையும். உங்கள் இலக்கு எதுவானாலும் அதில் போராடி வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் விரிவாக்கத் திட்டங்களை ரத்து செய்ய நேரிடும். உங்கள் வீட்டை புதுப்பிப்பது தொடர்பாக பணம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

இன்றைக்கு பெரும்பாலான பணிகளை பொருளாதார லாபத்துடன் செய்து முடிப்பீர்கள். வணிகத்தில் உங்கள் திட்டங்கள் நிலுவையில் இருக்கும். இன்றைக்கு பிற நபர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து தேவையற்ற விஷயங்களிலும் பணத்தை செலவு செய்வீர்கள்.

மிதுனம்:

உங்கள் பணி செய்யும் ஸ்டைல் உங்களுக்கு துன்பம் தருவதாக அமையும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நடக்காமல் கவலை அதிகரிக்கும். ஊழியர்கள் அல்லது பெண்கள் மீது தேவையற்ற சந்தேகம் கொண்டிருந்தால் அதற்கு பலமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். விற்பனை அதிகரித்தாலும் பண வரவு தேக்கம் அடையும்.

கடகம்:

இன்றைக்கு மனக் குழப்பங்களால் அவதி அடைவீர்கள். நீங்கள் விரும்பாத பணிகள் என்றாலும் கட்டாயம் எதுவும் இன்றி செய்து முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறு தெரிய வருகின்ற காரணத்தால் வீட்டில் நிம்மதியற்ற சூழல் ஏற்படும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்:

மனம் நிம்மதியின்றி தவிப்பதால் சரி எது, தவறு எது என்று புரியாது. யோசிக்காமல் வரம்பு மீறி பேசுவது மனக்காயங்களை ஏற்படுத்தும். பொழுதுபோக்காக நீங்கள் கருதுகின்ற சில விஷயங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மனக் கவலையை கொடுக்கும். பணியில் இருப்பவர்கள் வீட்டு வேலையை செய்ய இயலாது.

கன்னி:

உங்கள் உடல்நலன் மேம்பாடு அடைவதால் சற்று நிம்மதி அடைவீர்கள். பணியிடத்தில் வேலைகளை செய்து முடிப்பதற்கான ஒத்துழைப்பு கிடைக்காது. கடினமாக உழைத்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய இயலாது. எதிர்மறை சிந்தனைகள் நிரம்பியிருக்கும்.

துலாம்:

வீட்டில் உள்ள பெரியவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில் சோம்பேறியாக உணருவீர்கள். இதனால் பணிகள் தாமதம் அடையலாம். வணிகத்தில் இருப்பவர்கள் இன்று பணி செய்யாமல் பொழுதுபோக்க நினைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. எந்த வேலையை செய்வதானாலும் மிகக் கவனமாக செய்ய வேண்டும். மோசமான உடல்நிலை காரணமாக நீங்கள் எரிச்சல் அடைவீர்கள். கோபத்தில் பேசுவது பகையை அதிகப்படுத்தும். லாபம் கிடைத்த அடுத்த நொடியே நஷ்டமும் ஏற்படும்.

தனுசு:

இன்றைக்கு உங்கள் செயல்திறன் மூலமாக வீட்டில் உள்ள அனைவரின் மனங்களை வெற்றி கொள்வீர்கள். நீங்கள் தானம் செய்வீர்கள். அதற்கு உண்டான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை தடைபடுவதால் வருத்தம் அடைவீர்கள். உங்கள் செலவுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும்.

மகரம்:

இன்றைக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். அதிர்ஷ்டம் சாதகாமானதாக இருந்தால் உங்கள் பணிகள் சிறப்பாக அமையும். எதிர்பாலினத்தவர் மீது உண்டாகும் ஈர்ப்பு காரணமாக உங்களுக்கான மரியாதையை மறந்து விடுவீர்கள்.

கும்பம்:

இன்று சுபகாரியங்கள் நடக்கும். உங்கள் மனம் அமைதி பெறும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். லாபம் தரும் நடவடிக்கைகளில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். சமூக நிகழ்வுகளை மறந்து விடுவீர்கள். தினசரி செலவுகளுக்கான பணம் வந்து சேரும். உங்கள் நடவடிக்கையை குடும்பத்தினர் கண்காணிக்கின்றனர்.

மீனம்:

இன்றைக்கு நீங்கள் கவனக்குறைவுடன் செயல்படுவீர்கள். உங்கள் உடல்நலன் குறித்து அலட்சியம் காட்டினால் வருத்தம் அடைய நேரிடும். வணிகத்தில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். லாபம் அல்லது நஷ்டம் குறித்து நீங்கள் கவலை அடைய மாட்டீர்கள். வீட்டில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *