ஏழுமலையான் கோவிலை தரிசிக்க ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ்..!
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏழுமலையான் கோவிலை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்காக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜில் திருப்பதி கோவில், பத்மாவதி கோவில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி போன்ற கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்த சுற்றுலா பேக்கேஜ் டெல்லி விமான நிலையத்திலிருந்து தொடங்கி ஒரு இரவு, இரண்டு பகல் பயணம் செய்யும்படியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் இந்த அருமையான டூர் பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஒருவர் மட்டுமே பயணிபோருக்கு டூர் பேக்கேஜ் கட்டணம் ரூ. 21, 913 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நண்பர்களுடன் கூட்டாக செல்லும் பட்சத்தில் உங்களுக்கான கட்டணம் குறையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.