மக்கள் அதிர்ச்சி..! டாக்ஸி சேவையின் கட்டணம் அதிரடி உயர்வு ..!
மக்கள் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிசிகளை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்சிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதாவது வாகனங்களின் விலையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.
இரவு நேர பயணத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத் துணை செயலர் புஷ்பவன தலைமையில் நடத்தப்பட்ட முக்கிய கூட்டத்தில் கட்டண திருத்தம் குறித்த முடிவை கர்நாடக அரசு தற்போது எடுத்துள்ளது. இதில் புதிய கட்டண நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கட்டண முறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது