ஐபோன் 15-க்கு செம தள்ளுபடி.. அதுவும் காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஈ-காமர்ஸ் தளங்களும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.
உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பயன்படுத்துவதை பலர் கெத்தாக கருதுகின்றனர். இதனால் ஐபோன்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. புது மாடல் போன் விற்பனைக்கு வரும் போதெல்லாம் மக்கள் வரிசையில் நின்று வாங்கி செல்லும் காட்சிகளை கூட நாம் பார்த்திருக்கிறோம்.
பல்வேறு ஈ- காமர்ஸ் தளங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு திடீரென ஐபோன்களுக்கு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 15க்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஐபோன் 15இன் விலை ரூ. 39,949 தான்: இந்தியாவை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 15 இன் 128ஜிபி ஸ்டோரேஜ் ரக போனின் விலை ரூ.79,000 ஆக இருந்தது. பின்னர் இதன் விலை ரூ.72,999ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதன் விலையை ரூ. 39,949 என குறைத்து தள்ளுபடி அறிவித்துள்ளது. எனவே உங்களுக்கு நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் அல்லது உங்கள் காதலனுக்கோ /காதலிக்கோ ஐபோன் பரிசளிக்க வேண்டும் என நினைத்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிட்டதட்ட பாதி விலையில் ஐபோன் 15ஐ வாங்கலாம்.
விலை குறைப்பு எப்படி சாத்தியம்?: ஐபோன் 15ஐ ரூ.39,949க்கு வாங்க ஃபிளிப்கார்ட் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதாவது போனின் விலை ரூ.72,999. வாடிக்கையாளர்கள் இதனை வாங்க ஹெடிஎஃப்சி வங்கி கார்டினை பயன்படுத்தினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: இதனை அடுத்து உங்களது ஐபோன் 14ஐ எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.33,505க்கு எடுத்து கொள்கின்றனர். எனவே ஐபோன் 15ஐ வாங்க நீங்கள் மீதி தொகையான ரூ.39,949ஐ செலுத்தினால் போதும்.
ஐபோன் 15இன் சிறப்பம்சங்கள்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்15ஐ அறிமுகம் செய்தது. 6.1இன்ச் டிஸ்பிளே , யுஎஸ்பி வடிவிலான சி டைப் சார்ஜர் ஆகிய அம்சங்கள் கொண்டிருப்பதால் பலரும் இந்த போனை விரும்புகின்றனர். இந்த போனுக்கு ஐபோனுக்கான பிரத்யேக சார்ஜர் தேவையில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பேட்டரி நீடிப்பதாக ஐபோன் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.