இது தெரியுமா ? இதன் புகையை நுகர்வதால் நம் உடலும் மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு ஆகும்..!

அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு பொருள். இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம்.தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது. இவை சித்தர் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தசாங்கத்தில் உள்ள பொருட்கள்: 1. வெட்டி வேர் 2. லவங்கம் 3. வெள்ளை குங்குலியம் 4. ஜாதிக்காய் 5. மட்டிப்பால் 6. சந்தான தூள் 7. நாட்டு சர்க்கரை 8. திருவட்ட பச்சை 9. சாம்பிராணி 10. கீச்சிலி கிழங்கு

தசாங்கத்தின் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். உங்கள் தெருவே மணக்கும்.

தசாங்கம் கூம்பு வடிவ சாம்பிராணி போல் நாட்டு மருந்து கடைகளில் அல்லது இணையத்தில் கிடக்க பெறுகிறது. அதனை ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம். சகல விதமான ஐஸ்‌வர்யமும் வீட்டில் சேரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *