இது தெரியுமா ? தினமும் இரவு இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு வந்தால்…

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பின்வரும் சிக்கல்களிலிருந்து விடுபட உதவும்.

பல், ஈறு பிரச்சனை:
பல்வலி, பற் சொத்தை, ஈறு பிரச்சனைகள், வாய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் வைத்திருந்து பொறுமையாக சாப்பிட்டால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

செரிமானம்:
இரவில் கிராம்பை சாப்பிடுவது சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. குமட்டல், எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. மேலும் இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
தினமும் 2 கிராம்பை சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. எனவே கிராம்பை நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்க:
கிராம்புகளில் காணப்படும் சேர்மங்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது. கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. மேலும் உடலின் புற்று நோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி பெறாமல் தடுக்க உதவுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:
கிராம்பில் பல முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. கிராம்பில் யூஜெனோல் என்ற சேர்மமும் உள்ளது, இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளுடன் கிராம்புகளை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கல்லீரல் பாதுகாப்பு:
கிராம்புகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இவை நச்சுக்களை வெளியேற்றி கல்லீரளை பாதுகாக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *