“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” – கவனம் பெறும் லால் சலாம் ட்ரெய்லர்!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காட்சி லால் சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லரிலும் இடம்பெற்று இருந்தது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம்’ என்று ரஜினி பேசும் வசனம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.