சிவகார்த்திகேயனின் 23 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்… வைரலாகும் தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக விரைவில் எஸ்கே 21 வெளியாகவுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். எஸ்கே 21 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தின் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான தகவல்கள் கடந்த ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதில் என்னுடைய 23 வது படத்திற்காக உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடைய கதையை கேட்டு பிறகு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்
இந்த திரைப்படம் என்னுடைய சினிமா பயணத்தில் உங்கள் இயக்கத்தில் நடிக்கும் படம் எனக்கு எல்லா வகையிலும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அத்துடன் படப்பிடிப்பு தொடங்குவதற்காக காத்திருப்பதாகவும் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.