சாதம் மீந்து விட்டால் இனி கவலை வேண்டாம்.. இந்த 4 பொருள் இருந்தால் போதும் மொறு மொறு வத்தல் செய்யலாம்.!

பொதுவாக இந்திய வீடுகளில் எவ்வளவு தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் கூட தினமும் ஒரு கப் சாதமாவது கட்டாயம் மீந்து விடும். ஆனால் பழைய சாதம் மீந்து போனால் இனி கவலைப்பட வேண்டாம்.

ஏனென்றால் பழைய சாதம் மீந்து போனால் அதை தூக்கி தூர போடாமல் இப்படி வடகம் செய்து பாருங்க சுவை அப்படி இருக்கும்.

மொறு மொறு வடகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சாம்பார் சாதம், வத்தல் குழம்பு, புளிக்குழம்பு என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட இது ஒரு ருசியான சைடிஸ் ஆகும்.

பழைய சாதம் மீந்தால் எப்படி வீணாக்காமல் மொறு மொறுவென்று வத்தல் செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

சாதம்

உப்பு

சீரகம்

சிகப்பு மிளகாய் தூள்

எண்ணெய்

செய்முறை :

தண்ணீர் ஊற்றி வைத்துள்ள முதல் நாள் மீந்த சாதத்தை நன்றாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அந்த சாதத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்.

அடுத்து உங்கள் காரத்திற்கு ஏற்ற அளவு சிகப்பு மிளகாய் பொடியை சேர்த்து கொள்ளவும்.

தற்போது அனைத்தையும் நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு தட்டில் எண்ணெய்யை நன்றாக தடவி அதில் பிசைந்து வைத்துள்ள சாதத்தை தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கொள்ளுங்கள்.

பிறகு இதை நன்றாக வெயிலில் காயவைத்து வத்தலை எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் இந்த வத்தலை போட்டு பொரித்து சாப்பிட்டால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

இந்த அரிசி வத்தலை ஒரு டப்பாவில் போட்டு வைத்து நீண்ட நாட்களுக்கு வறுத்து சாப்பிடலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *