கிரீன் கார்டு, வொர்க் பர்மிட், H1B விசா.. அமெரிக்கா அறிவித்த புதிய தளர்வு, இந்தியர்களுக்கு ஜாக்பாட்!!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் பரிந்துரை அடங்கிய மசோதா வெளிநாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஹெச்1பி விசா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வை மாற்றப்போகும் முக்கியமான மசோதாவாக உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஹெச்-4 விசாவில் அமெரிக்காவில் வசித்து வரும் 1 லட்சம் பேருக்கு ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மிட் வழங்கும் முறையைச் செயல்படுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த ஹெச்-4 விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலானோர் ஹெச்-1பி விசாவில் இருக்கும் மக்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் தான். இந்த ஒப்பந்தம் மூலம் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் 2.5 லட்சம் aged-out குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் தீர்வு காணப்படும் எனக் கூறப்படுகிறது.
Aged-Out என்ற சொல் பொதுவாக அமெரிக்காவில் பயன்படுத்தப்படுபவை. பெற்றோர் பாதுகாப்பில் இருந்து தனியாக வாழும் நிலையை அடையும் குழந்தைகளை Aging out Child என அழைக்கப்படும். இப்பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு பொதுவாக 17-21 வயதினராக இருப்பார்கள்.
ஆனால் குடிவரவு சட்ட திட்டத்தில், Aged-Out என்பது ஹெச்-1பி விசாவில் இருக்கும் பெற்றோர்கள், அவர்களது குழந்தை 21 அல்லது 18 வயதை எட்டினால் I-918 petition மூலம் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியாதவர்கள்.
இந்தப் புதிய விதிகள் இந்தியர்களுக்குப் பெரிய அளவில் பயன்படும், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்காகக் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்தப் புதிய விதி பெரிய அளவில் பயன்படும். எப்படின்னு தானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன்.
வொர்க் பர்மிட் அல்லது கிரீன் கார்டு பெற முடியாத நிலையில் அவர்களின் துணைவி பணிக்கு செல்ல முடியாது, கிரீன் கார்டு இல்லையெனில் 21 அல்லது 18 வயதை எட்டினால் ஹெச்-1பி விசாவில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் தாய் நாட்டிற்கு அனுப்பப்படும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்சனைக்கும் ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மிட் வழங்கும் முறை தீர்வாக உள்ளது.
இந்தப் புதிய மசோதா மூலம் நீண்ட கால H-1B விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்கு Aging out பாதுகாப்பை வழங்க உள்ளது, குழந்தைகள் எட்டு ஆண்டுகளாக H4 நிலையைப் பெற்று இருந்தால் வொர்க் பர்மிட் வழங்கப்படும்.
கூடுதலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 18,000 வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளை நாட்டின் வரம்புகளுடன் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 158,000 வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளை அமெரிக்கா வழங்கும்.
மேலும் K-1, K-2, K-3 ஆகிய 3 பிரிவுகளில் 25000 பேருக்கு வொர்க் பர்மிட், H-4 spouses மற்றும் children கீழ் 1,00,000 பேருக்கு வொர்க் பர்மிட் வழங்கப்பட உள்ளது.