Bharat rice: 1 கிலோ வெறும் 29 ரூபாய்.. எங்கு கிடைக்கும்? ஆன்லைனில் வாங்க முடியுமா?
மத்திய அரசு 29 ரூபாய் என்ற மானிய விலையில் ‘பாரத் அரிசி’யை செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தலைநகர் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாத்-ல் பாரத் அரிசியை அறிமுகப்படுத்த உள்ளார்.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்க உள்ளது. இந்த மலிவு விலை அரிசியை எங்கு வாங்கலாம்..?
பாரத் அரிசி எதற்காக?: இந்தியாவில் கடந்த ஓராண்டில் தானியங்களின் ரீடைல் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியில் உணவு பணவீக்கம் முக்கியப் பங்கீட்டை வகிக்கும் வேளையில் இதைச் சரி செய்ய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மக்களுக்கு ‘பாரத் அரிசி’ விற்பனையைத் தொடங்க முடிவு செய்தது.
5 லட்சம் டன் அரசி: மத்திய அரசு இத்திட்டத்தின் முதல் கட்டமாக, NAFED, NCCF மற்றும் Kendriya Bhandar ஆகிய 3 ஏஜென்சிகள் மூலம் ‘பாரத் ரைஸ்’ பிராண்டின் கீழ் ரீடைல் விற்பனைக்காக சுமார் 5 லட்சம் டன் அரசியை மத்திய உணவு கழகம் ஒதுக்கியுள்ளது.
இந்த அறுவடைக் காலத்தில் அரிசி நல்ல விளைச்சல், எஃப்சிஐ மற்றும் பைப்லைனில் போதுமான அரசி இருப்புகள் இருந்த போதும், அரிசி ஏற்றுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்ட போதும் ரீடைல் சந்தையில் அரிசி விலை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவே Bharat Rice அறிமுகம் செய்யப்படுகிறது.
பாரத் அரிசி எங்கே கிடைக்கும்?: பாரத் அரிசி மொபைல் வேன்கள் மற்றும் NAFED, NCCF, Kendriya Bhandar ஆகிய மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் விற்பனை முனையங்களில் மக்கள் நேரடியாக வாங்கிக்கொள்ள முடியும். மேலும் இது விரைவில் இ-காமர்ஸ் தளங்கள் உட்படப் பிற சில்லறை தங்களிலும் கிடைக்கும்.
மானிய விலையில் விற்கப்படும் பிற பொருட்கள்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பாரத் ஆட்டா என்ற பிராண்டின் கீழ் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை அறிமுகப்படுத்தியது. இது கூட்டுறவு நிறுவனங்களான NAFED, NCCF மற்றும் கேந்திரிய பந்தர் மூலம் 800 மொபைல் வேன்கள் மற்றும் 2,000 விற்பனை நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு இத்தகைய மானிய திட்டங்கள் மூலம் கோதுமை தவிர, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு கிலோ பாரத் கடலை பருப்பு ரூ.60க்கும், வெங்காயத்தைக் கிலோவுக்கு ரூ.25க்கும் வழங்குகிறது.