#BIG NEWS : மத்தியப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு : 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு ..!
பட்டாசு ஆலையில் இன்று (பிப்.06) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர வெடி விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு வெடி விபத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்தின்போது மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக ஓடும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக 4 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.