2026ஆம் ஆண்டு வரை கனடாவில் வெளிநாட்டவர்கள் இதைச் செய்யமுடியாது: தடை நீட்டிப்பு
வெளிநாட்டவர்கள், 2026ஆம் ஆண்டு வரை, கனடாவில் வீடு வாங்கமுடியாத வகையில் தடை நீட்டிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கனடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் வீடு வாங்கத் தடை
கனேடியர்கள் அல்லாதவர்கள், கனடாவில் வீடு வாங்குவதற்கு, ஜஸ்டின் ட்ரூடோ அரசு 2022ஆம் ஆண்டு தடை விதித்தது.
இந்த தடை, 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தடை நீட்டிப்பு
இந்நிலையில், கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது, 2027, ஜனவரி 1ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கனடா நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland), வெளிநாட்டவர்கள் வீடு வாங்க விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதன் மூலம், கனடாவிலுள்ள வீடுகள், பணக்காரர்கள் வீடுகள் வாங்கிப்போட்டுவிட்டு, பிறகு அவற்றை விற்று லாபம் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படாமல், கனேடிய குடும்பங்கள் வாழ்வதற்கு அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறோம் என்றார்.