செங்கடலில் தாக்கப்படும் கப்பல்கள் : எழுந்துள்ள சந்தேகம்
தெற்கு செங்கடல் வழியாக சென்ற இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மை காலமாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்டுவந்த தாக்குதல் தற்போதும் தொடர்ந்த வண்ணமே உண்டு.
ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
மேலும் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து இராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன.’
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும் ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.