பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு கிடைத்த கௌரவம்… பொலிசார் கொடுத்த ராஜ மரியாதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட பிரதீப் ராஜமரியாதையும் பொலிஸ் பாதுகாப்பில் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 23 போட்டியாளர்களில் பிரதீப்பும் ஒருவர் ஆவார்.
மனதில் பட்டதை பளீச்சென்று பேசுவதுடன், ரசிகர்கள் பலருக்கும் இவர் பிடித்தமான போட்டியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் திடீரென பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்து அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தில் பிரதீப் உடன் பொலிசார் ஒருவரும் நடந்து செல்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு என்று கூறியவர் இன்று பொலிசாருடன் ராஜ மரியாதையுடன், பள்ளிக்கு விருந்தினராக செல்கின்றார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டைட்டில் வின்னருக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.