கடைசியாக நடிக்கும் படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் என்ன?
நடிகர் விஜய் விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கும் நிலையில், இவர் கடைசியாக நடிக்கும் படத்திற்கு வாங்கியுள்ள சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய்க்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இவர் கைவசம் இருக்கும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்குவதாகவும் கூறியுள்ளார்.
இப்படத்தினை யார் தயாரிக்கின்றனர் என்பது வெளியாகாத நிலையில், GOAT என்ற படத்திற்காக நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.
அடுத்தபடியாக விஜய்யின் இறுதி படமான தளபதி 69 படத்திற்கு சற்று அதிகமாக, அதாவது 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவல் உண்மை என்றால் இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் தான் முதல் இடத்தில் இருப்பார் என்று கூறப்படுகின்றது. ஆனால் ரசிகர்கள் தளபதி 69 படத்திற்கான விஜய்யின் உண்மையான சம்பளத்தை தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.