அடேங்கப்பா… போஸ் வெங்கட்டிற்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா? ஷாக் கொடுத்த புகைப்படங்கள்
நடிகர் போஸ் வெங்கட்டின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
போஸ் வெங்கட்
“மெட்டி ஒலி” என்ற தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் போஸ் வெங்கட்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் சீரியல்கள் ஒலிப்பரப்பான நேரத்தில் அனைத்து குடும்பங்களிலும் ஒருவராக இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து வெள்ளத்திரையில் வாய்ப்பு கிடைக்க முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பின்னர் கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். “கன்னிமாடம்” என்ற படத்தினையும் இயக்கியிருக்கிறார்.
நடிகராக இருந்து இயக்குநராக உருவெடுக்கும் போஸ் வெங்கட்டின் இயக்கத்தில் விமல் நடிப்பில் புதிய படமொன்று தயராகவுள்ளது.
குடும்ப புகைப்படம்
இந்த நிலையில், போஸ் வெங்கட் நடிகை சோனியாவை காதல் செய்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், போஸ் வெங்கட்டின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
புகைப்படத்தை இணையவாசிகள், “ போஸ் வெங்கட்டிற்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்கா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.