இந்த ஐந்து கனவுகளில் ஒன்று உங்களுக்கு வந்தால் உங்களுக்கு துரதிஸ்டம் வருமாம் தெரிஞ்சுக்கோங்க!

நமது ஆழ் மனதில் இருக்கும் ஆசைகள் எண்ணங்களை வெளிப்படுத்ததுவது தான் கனவுகளாகும்.

சிலருக்கு கனவுகள் வந்தால் அவர்களுக்கு அது உச்சாகத்தை தருகின்றது. சில கனவுகள் நமக்கு வருவதற்கான காரணம் எதிர்காலத்தில் நாம் சந்திக்க போகும் விடயங்களை முன்கூட்டியே கூறும் கனவுகளாக இருக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

எப்படியான கனவுகள் நமது வாழ்கையில் எமக்கு துரதிஸ்டத்தை முன்னெச்சரிக்கையாக காட்டுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.இருண்ட நீர் மற்றும் கடல் புயல்
நீர் கொந்தளித்து வருதல் மற்றும் இருண்ட இடங்கள் போன்றவை நம் கனவில் வந்தால் கட்டாயமாக துரதிஸ்டமான விஷயம் நடக்க போகிறது என்பது தான் அதற்கு அர்த்தம். எனவே அது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக அருக்க வேண்டும்.எந்த விஷயத்திற்கும் கொந்தளிக்காமல் மோதல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2.உடைந்த கண்ணாடிகள்
கண்ணாடிகள் எமது சரீரத்தை பிரதிபலிக்கின்றன. அந்த வகையில் உடைந்த கண்ணாடிகள் கனவில் தோன்றினால் அது உங்கள் சுய முன்னேற்றத்தில் தடங்கல் அல்லது யதார்த்தத்தைப் பற்றிய உங்கள் உணர்வில் இடையூறு ஏற்படுவதைக் குறிக்கிறது.இவ்வாறு கனவு வந்தால் உங்கள் சுயமரியாதைக்கு பங்கம் வரப்போகிறது அதை தடுக்க வேண்டும் என்பதற்காக இது எச்சரிக்கையாக வரும்.

3.பற்கள் விழுவது
பற்கள் மூலம் குறிக்கப்படுவது சுயவெளிப்பாடு ஆகும். எனவே நீங்கள் பற்கள் விழுவதை போல கனவு கண்டால் அது உங்கள் சுயமரியாதையும் சுயகட்டுப்பாட்டையும் நீங்கள் இழக்க போவதாக காட்டுகின்றது. உங்கள் சுய கட்டுப்பாட்டு விஷயத்தில் நீங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

4.கிழிந்த துணிகள்
கிழிந்த ஆடைகள் கனவில் வந்தால் அது நீங்கள் பின்டைவான ஒரு சூழ்நிலைக்கு செல்ல போவதை முன்கூட்டியே கூறுகின்றது. இதனால் நீங்கள் உறவுகள், வாழ்க்கைப் பாதைகள் அல்லது தனிப்பட்ட இலக்குகள் என உங்கள் வாழ்க்கையின் வலுவூட்டல் தேவைப்படக்கூடிய பகுதிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

5.குழப்பமான பாதைகளில் தொலைந்து போவது
ஒரு பாதையில் நீங்கள் தொலைந்து போவது போல கனவு கண்டால் அது உங்களின் வாழிக்கையில் விழித்திருக்கும் தன்மையை வலுவாக்க குறிக்கின்றது எனலாம்.இப்படி கனவு வந்தால் துரதிர்ஷ்டங்களைத் தடுக்க, உங்கள் திட்டங்களை மறுமதிப்பீடு செய்வது, நம்பகமான ஆதாரங்களில் இருந்து வழிகாட்டுதலைப் பெறுவது மற்றும் உங்கள் நோக்கத்தை மீண்டும் தொடர நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *