இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்ய முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜஸ்வர்யா ராய்.

இந்த நிலையில் சமிபகாலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுவதால் இவர்கள் பிரிந்து விட்டார்களா? என பலர் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பொது நிகழ்வில் மகள், மாமனார், அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் என குடும்பத்திலுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பிறந்த நாள் வாழ்த்து
இதனை தொடர்ந்து அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் நேரத்தில் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இப்படியொரு நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டு தெரிவித்துள்ளார்.

 

அதில் அபிஷேக் பச்சனின் சிறுவயது புகைப்படம் இருக்கிறது.

இனி விவாகரத்து இடமில்லை என்பதனை ஐஸ்வர்யா ராயின் பதிவு உணர்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *