இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகியுள்ள Citroen C3 Aircross AT கார்! விவரம் இதோ
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இந்திய சந்தையில் கால் பதித்துள்ளது Citroen C3 Aircross கார். ஆனால் இந்த முறை பல வசதிகள் இந்தக் காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ரூ.12.85 லட்சம் விலையுள்ள பட்ஜெட் ரேஞ்ச் Citroen காரில் அனைவரும் எதிர்பார்த்த ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி Max 5, Plus 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.
Citroen C3 Aircross காரின் விலை:
Citroen C3 Aircross AT Plus AT 5 இருக்கை காரின் விலை ரூ.12,84,800
Citroen C3 Aircross AT Max AT 5 இருக்கை காரின் விலை ரூ.13,49,800
Citroen C3 Aircross AT Max AT 5+2 இருக்கை வசதி உள்ள காரின் விலை ரூ.13,84,800
ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் வசதிகள்
மெதுவாக ஊர்ந்து செல்லும் வசதி
இந்தக் காரில் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எந்தவித சங்கடமும் இல்லாமல் Citroen C3 Aircross காரால் மெதுவாக ஊர்ந்து செல்ல முடிகிறது. காலினால் பிரேக்கை அழுத்தி கியர்பாக்ஸில் D-யை ப்ரஸ் செய்தால், தானாகவே கார் 8kmph வேகத்தில் செல்லும். இதனால் அடிக்கடி ஆக்ஸிலேட்டரை நீங்கள் மிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
நாமே மாற்றிக்கொள்ளும் வசதி
இந்த ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் +/- என்ற வடிவத்தில் நாமே கைகளால் மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. மேனுவல் மோடில் செல்லும் போது உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் இஞ்சின் பிரேக்கை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த விலையில் நாம் Citroen C3 Aircross காரில் பேடில் ஷிஃப்டரை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் கார் செல்லும் வேகத்திற்கு ஏற்றார் போல் கியர் மாற்ற வேண்டிய அவசியமில்லாத வகையில் தான் இது புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
5+2 இருக்கை வசதி
7 நபர்கள் வரை அமரும் வசதி Max மாடலில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இதன் விலை ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலை விட ரூ.35,000 அதிகமாகும். ஐந்து பேர் அமர்வதற்கு கொஞ்சம் நெருக்கடியாக இருந்தாலும் அந்தளவிற்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தாது. மூன்றாவது வரிசையில் உள்ள இருக்கையை நீங்கள் அகற்றிக் கொள்ளலாம். அதேப்போல் இரண்டாம் வரிசையில் உள்ள இருக்கைகளையும் மடித்துக்கொள்ளும் வசதி உள்ளது.
7 இருக்கைகள் கொண்ட Citroen C3 Aircross காரின் உச்சபட்ச மாடலின் விலை ரூ.13.85 லட்சமாகும். இந்தக் காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மாருதி சுசூகியின் XL6 Alpha AT ரூ.14.06 லட்சத்திற்கும், கியாவின் கேரன்ஸ் பிரெஸ்டீஜ் iMT டீசல் ரூ.13.95 லட்சத்திற்கும், மஹிந்தராவின் ஸ்கார்பியோ Z2 பெட்ரோல் MT ரூ.13.60 லட்சத்திற்கும் கிடைக்கிறது.
மாருதி சுசூகியின் XL6 மற்றும் கியாவின் கேரன்ஸ் என இரண்டும் நடுத்தர வசதிகளைக் கொண்ட கார்களாகும். இதில் ஏறக்குறைய இரண்டு கார்களிலும் ஒரேப்போன்ற வசதிகளே கிடைக்கிறது. ஆனால் ஸ்கார்பியோ-N காரின் பேஸ் மாடல், Citroen C3 Aircross காரை விட குறைவான வசதிகளையே கொண்டுள்ளது.