Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 07, 2024 – புதன்கிழமை
மேஷம்:
உங்கள் காதல் உறவுகளில் இன்று மறுமலர்ச்சி காணப்படும். பணியிடத்தில் உங்கள் புத்தாக்க சிந்தனை மேலோங்கும். உங்கள் கடுமையான பணிகளுக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்வது அல்லது வாசிப்பது மன அமைதியை தரும். சாகசம் நிறைந்த பயணங்கள் நல்ல அனுபவங்களை தரும்.
ரிஷபம்:
காதலில் எதார்த்த சூழலை ஏற்றுக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்கள் திறன்களை மேம்படுத்தினால் வெற்றி கிடைக்கும். தோட்டப் பராமரிப்பு அல்லது சமையல் பணிகளை செய்வது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டால் பயணங்கள் சுமூகமானதாக அமையும்.
மிதுனம்:
உங்கள் இயற்கையான வசீகரத்தை பயன்படுத்தி உறவுகளை பலப்படுத்திக் கொள்ளவும். தொழில்முறை இடங்களில் உங்கள் உரையாடல் திறன் மேம்படும். உங்கள் உடல் நலன் மற்றும் மனநலன் குறித்து அக்கறை கொள்ளுங்கள். யோகா பயிற்சி அல்லது மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கடகம்:
உங்கள் காதல் உறவுகள் பலமானதாக இருக்கும். அதேசமயம், உங்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பணி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது உங்கள் ஆழ்மனம் துணை நிற்கும். மனநலனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். சௌகரியமான வகையில் பயணங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
இன்றைக்கு உங்களுக்கு ரொமான்ஸ் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தலைமைத்துவ பண்புகள் மேலோங்கும். அதன் மூலமான பலன்கள் அதிகரிக்கும். இசையை ரசிப்பது மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் மனதை ஈர்க்கும் இடங்களுக்கு பயணம் செய்யவும்.
கன்னி:
நேர்மையும், நம்பிக்கையும் இருந்தால் உங்கள் காதல் உறவுகள் பலப்படும். விரிவான கண்ணோட்டத்துடன் அணுகினால் தொழில்முறை வெற்றி கிடைக்கும். சீரான வாழ்வியல் நடவடிக்கைகள் தான் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவும். வளர்ச்சி சார்ந்த இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும்.
துலாம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்பட இருக்கிறது. கூட்டு முயற்சிகளின் மூலமாக தொழில்முறை வெற்றி கிடைக்கும். பணிச்சுமைகளுக்கு நடுவே ஓய்வு தேவை. நன்றி உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனதை கவரும் வகையிலான இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.
விருச்சிகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று வியத்தகு மாற்றங்கள் உண்டாகும். இலக்குடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் உடல் நலன் மற்றும் மனநலன் குறித்து கவனம் செலுத்தவும். தியானம் செய்வது ஆழமான புரிதலை உண்டாக்கும். பயணங்களை உங்களை அறிந்து கொள்ள உதவும்.
தனுசு:
உங்கள் காதல் வாழ்க்கையில் நேர்மறையான சூழல் உருவாகும். உங்கள் ஆர்வத்தின் மூலமாக தொழில்முறை வாய்ப்புகள் புதிதாக கிடைக்கும். உடல் நலனை தக்க வைத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம். புதிய பொழுதுபோக்கு பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பயணத்தின் போது வெவ்வேறு பாரம்பரியங்களை தெரிந்து கொள்வீர்கள்.
மகரம்:
காதலில் விசுவாசமிக்க நபராக நீங்கள் இருப்பீர்கள். எதிலும் கவனமுடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். வாழ்வியல் நடவடிக்கைகள் சீரானதாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சி செய்தால் மனம் திடமானதாக இருக்கும். ரிலாக்ஸ் தரக் கூடிய இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.
கும்பம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் கற்பனையான சூழல் நிலவுகிறது. உங்கள் புத்தியை தூண்டக் கூடிய பார்ட்னர்களை தேடிக் கொள்ளுங்கள். பணியிடத்தில் புத்தாக்க சிந்தனைகள் வெற்றியை தேடி தரும். உரையாடல்கள் புத்துணர்வை தரும். மனதை ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.
மீனம்:
உங்கள் காதல் உறவு சுமூகமானதாக இருக்கும். கருணை குணம் கொண்டிருந்தால் உறவுகள் பலப்படும். பணியிடத்தில் உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கலை நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தினால் உங்கள் மனநலன் மேம்படும்.