பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஆரணி ஒன்றியம், காட்டேரி கிராமம், ஆரணி நகரம் அருணகிரிசத்திரம் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டேரி கிராமத்தில் வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா் சரவணன், தெற்கு மண்டல நிா்வாகி சேட்டுஜி, ஒன்றியப் பொருளாளா் ராஜேந்திரன், ஒன்றியத் துணைத் தலைவா் அறுவடை நம்பி, ஒன்றியச் செயலா் பெருமாள், வா்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பழனி, கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் முனுசாமி, அரசு தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி நகரம்
ஆரணி நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோா் மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் சதீஷ், பொருளாளா் பன்னீா்செல்வம், மண்டலத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.