ஒன்றுமே இல்லாத இந்தச் சின்ன விஷயத்தை ஏன் ஊதிப் பெரிதாக்குகிறார்கள் : ராகுல் காந்தி..!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது நாய்க்குக் கொடுத்த பிஸ்கட்டை ஒருவருக்கு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, அசாம் முதல் அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் பதிவிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் முகவர்களை நாயுடன் ஒப்பிட்டுப் பேசினார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் தொண்டர்களை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்தக் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

ராஞ்சியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், காரின் மேற்புறத்தில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே நாய்க்குட்டி ஒன்று இருந்தது.

அது குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தாலும் காங்கிரசில் நான் இருந்தபோது அந்த பிஸ்கட்டை என்னைச் சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஓர் இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன்,” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.அதில், “நாய்க்கு பிஸ்கட்டை கொடுக்க முயன்றபோது அது கூட்டத்தைக் கண்டு நடுங்கியது. அதனால் அதன் உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். பிறகு அதனை நாய் சாப்பிட்டது. ஒன்றுமே இல்லாத இந்தச் சின்ன விஷயத்தை ஏன் ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை,” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *