இது தெரியுமா ? நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு…
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.
நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை வலுவாக்குகிறது.
நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு நோயினையும் தடுக்கிறது.
நெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.
நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.
நெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.
நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிடலாம்.
இப்படியும் சாப்பிடலாம்?
பெரிய நெல்லிக்காயையோ, அதன் சாற்றையோ நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், நெல்லிக்காயுடன் வறுத்த உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துத் துவையலாகச் சாப்பிடலாம்.
ஒன்று முதல் 3 வயதுக் குழந்தைகளுக்கு 15 மில்லி கிராமும்,
4 – 13 குழந்தைகளுக்கு 25 – 45 மில்லிகிராம் வரையிலும்,
வளர்ந்தவர்களுக்கு 90 மில்லி கிராம் வரையிலும் போதுமானது.