ரோகித் சர்மா சரியாக பேட்டிங் ஆடவில்லை – கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம், ஏன்? விளக்கம் கொடுத்த பயிற்சியாளர்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துபாயில் ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இந்த ஏலம் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதுவரையில் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார் என்பதற்காக காரணம் தெரியாமலிருந்தது. இந்த நிலையில் தான் அதற்கான விளக்கத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார். கடந்த சில சீசன்களாக ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவரது பேட்டிங் திறமை அணிக்கு கண்டிப்பான முறையில் தேவை. ஆதலால், தான் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கினோம். இனி, அவர் அணியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் ஆடலாம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, மும்பை இந்தியன்ஸ் அணி மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்க் பவுச்சர் கூறியதில் பல விஷயங்கள் தவறாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *