காமெடி நடிகர் பாண்டுவின் மகனும் ஒரு நடிகரா? யார் அவர் தெரியுமா?
காமெடி நடிகர் பாண்டுவின் மகனும் ஒரு நடிகர் என்ற தகவல் சினிமா ரசிகர்கள பலரும் அறிந்திராத ஒன்று. அவர் யார் என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த காமெடி நடிகர்களில் பாண்டுவும் ஒருவர். காமெடி கேரக்டர்களுடன் இவர் குணச்சித்திர நடிப்பிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் பாண்டு.
காமெடி நடிகர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான பாடி லாங்வேஜை வெளிப்படுத்துகின்றனர். அதுபோல பாண்டுவும், கண்களை சிமிட்டி தனக்கே உரிய டயலாக் டெலிவரியை வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பார். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படம்தான் இவர் அறிமுகமான முதல் படம். தொடர்ந்து ஏராளமான படங்களிலும், மெகா தொடர்களிலும் பாண்டு நடித்திருக்கிறார்.
சினிமாவை தாண்டி பாண்டுவுக்கு ஓவியத்தில் அதிக ஆர்வம் உண்டு. தென்னிந்தியாவில் ஓவிய ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர்தான் என்ற தகவலும் உள்ளது. எம்ஜிஆர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இவர் முக்கிய படங்களை ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார்.
குமுதா என்பவரை திருமணம் செய்துள்ள பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என்ற 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் பிண்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
வெள்ளச்சி என்ற படம் மூலம் அறிமுகமான பிண்டு தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாண்டு உயிரிழந்தார் என்பது கவனிக்கத்தக்கது.