டிசிஎஸ் இறுதி எச்சரிக்கை.. அடித்து பிடித்து ஓடும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்குது..?!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ், தனது ஊழியர்களை வொர்க் ப்ரம் ஹோம்-ல் இருந்து மொத்தமாக வெளியேற்றி வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது. ஆனால் ஊழியர்களோ நீங்க சொல்றது, நான் என்ன கேட்பது என்ற போக்கில் உள்ளது.

டிசிஎஸ் நிர்வாகத்தின் ரிட்டன் டூ ஆபீஸ் விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றுவதில்லை, இதனால் கடுமையான நடவடிக்கையை இந்த வருட அப்ரைசல் பணிகளுக்கு முன்பு எடுக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது. இதன் பிடி முதலும் கடைசியுமாக ஒரு எச்சரிக்கையை டிசிஎஸ் தனது ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது.

டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழியர்களுக்கான ரிட்டன் டூ ஆபீஸ் காலக்கெடுவை மார்ச் காலாண்டு இறுதி வரையில் நீட்டித்துள்ளது. ஆனால் இது தான் கடைசி நீட்டிப்பு என்பதையும் அனைத்து ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளது, இதனால் ஒட்டுமொத்த டிசிஎஸ் ஊழியர்களும் அலுவலகம் செல்ல தயாராகியுள்ளனர்.

மார்ச் 31க்கு பின்பு அலுவலகம் வராத ஊழியர்கள் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டிசிஎஸ்-ன் தலைமை செயல் அதிகாரி என்ஜி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், அதேவேளையில் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

மேலும் ஊழியர்களுக்கு மார்ச் 31க்குள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஈமெயில் அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் என்ஜி சுப்பிரமணியம்.

சைபர் அட்டாக்கள் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் ஊழியர்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத கட்டமைப்பில் இருந்து கொண்டு பணியாற்றுவதும், தகவல் திருட்டுக்கு வழி வகுக்கும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது எனக் கெரிவித்துள்ளார்.

டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் அமெரிக்க அலுவலக ஓன்றில் சைபர் செக்யூரிட்டி பிரச்சனை ஏற்பட்டது. டிசம்பர் மாதம் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் ransomware பிரச்சனை ஏற்பட்டது, ஆனால் எவ்விதமான பெரிய பிரச்சனைகளும் நடக்கவில்லை.

டிசிஎஸ் நிர்வாகம் கொரோனாவுக்கு முன்பு இருந்த கட்டமைப்பைத் திரும்பவும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதேபோல் அனைத்து ஊழியர்களையும் அழைத்த பின்பு அடுத்த சில காலாண்டுகளில் தனது கனவுத் திட்டமான 25-25 ஹைப்ரிட் மாடலை கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது. டிசம்பர் காலாண்டு முடிவில் மொத்த ஊழியர்களில் சுமார் 65 சதவீதம் பேர் அலுவலகம் திரும்பிவிட்டனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *