நடிகர் அஜித்தாவே இருந்தாலும் இதை எல்லாம் செய்யலனா வசமா மாட்டிப்பாரு.. ஆஃப்-ரோடு டிராவல் செய்வதெல்லாம் ஒரு கலை!

வாகனங்கள் மீது அதீத ஆர்வமிக்கவர் நடிகர் அஜித்குமார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவரின் செயல்பாடுகளும் உள்ளன. இவர் டூ-வீலரில் வாயிலாகவே உலக அளவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், அவர் செல்லாது ஆஃப் ரோடு பயணங்களே இல்லை என கூறும் அளவிற்கு அதிக அளவில் அவர் ஆஃப்-ரோடு டிராவல்களைச் செய்திருக்கின்றார்.

இந்த ஆஃப்ரோடு டிராவலே சமீப காலமாக இந்திய இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமாகி வருகின்றது. நாட்டில் இளைஞர்கள் சிலர் குமரி-இமயம் டிராவலைகூட அசால்டாக டூவீலரில் மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இது போன்று லாங் டிராவல் செய்வது மற்றும் ஆஃப்-ரோடு டிராவல் செய்வது மிகுந்த உற்சாகம் தரக்கூடியதாக இருக்கலாம்.

எந்த அளவிற்கு இது மிகுந்த உற்சாகத்தை தருகிறதோ அதைபோலவே அதிக ஆபத்தானதும் கூட இந்த ஆஃப்-ரோடு டிராவல் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். சிறிது தவறு செய்தால்கூட பெருத்த சிக்கலில் அது நம்மை சிக்க வைத்துவிடும். இதனால்தான் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என சில தனித்துவமான ரூல்ஸ்களை வாகன ஆர்வலர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர்.

அந்த டிராவல்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த ரூல்களை அலட்சியமாக கருதினால் நீங்கள் நடிகர் அஜித்குமாரைவிட மிக சிறந்த ரைடராக இருந்தாலும் சிக்கல்தான். சரி வாருங்கள் ஆஃப்-ரோடு டிராவலுக்கான ரூல்கள் பற்றிய விபரத்தைக் காணலாம்.

சரியான வாகனங்களைத் தேர்ந்தெடுக்கவும்: நீங்கள் அதிகம் ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொள்பவர் என்றால் நீங்கள் வழக்கமான பயன்பாட்டிற்கான கார், பைக்கை தேர்ந்தெடுக்க கூடாது. ஆஃப்-ரோடு பயணத்திற்கு என்றே உருவாக்கப்பட்டு இருக்கும் காரை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பைக்கிலும் இதே கொள்கையையே பின்பற்ற வேண்டும்.

இரண்டு சக்கர வாகனத்தைப் பொருத்த வரை ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்சர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் யெஸ்டி அட்வென்சர் உள்ளிட்ட பைக் மாடல்களே ஆஃப்-ரோடு பயணங்களுக்கான மிக சிறந்த டூ-வீலர் ஆகும். இவற்றில் ஏதேனும் ஓர் வாகனம் இருந்தால் மட்டுமே நீங்கள் ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இதுவே முதல் விதியும்கூட. இந்த வாகனங்களைத் தவிர்த்து வழக்கமான வாகனங்களைக் கொண்டு ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொண்டால் மிகப் பெரிய சிக்கல் மற்றும் ஆபத்தில் சிக்குவது நிச்சயமே. கார்களிலும் ஆஃப்-ரோடு உகந்த வாகனங்கள் தற்போது சந்தையில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. டாடாவின் பஞ்ச், ஜீப் மெரிடியன், மஹிந்திரா ஸ்கார்பியோ, தார், எம்ஜி குளோஸ்டர், மாருதி சுஸுகி ஜிம்னி, ஃபோர்ஸ் கூர்கா ஆகியவை பெஸ்ட் ஆஃப்-ரோடு திறன் கொண்ட கார்கள் ஆகும்.

குறிப்பாக, மஹிந்திரா தார், சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகியவை ஆஃப்-ரோடு பயணங்களுக்கான மிக மிக சிறந்த கார்களாக இருக்கின்றன. இவற்றால் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார்களால் மட்டுமே இமாச்சல் மற்றும் சிம்லா போன்ற பாதையே இல்லாத கரடு-முரடான இந்தியாவின் மலை பாதைகளில் பயணிக்க முடியும்.

உங்கள் ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்ததா என்பதை ஆராயவும்: ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளும் முன்னர் உங்கள் வாகனம் அதற்கு உகந்தது தானா என்பதை ஆராயவும். குறிப்பாக, அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டதா என்பதை அறிந்துக் கொள்ளவும். இந்த அம்சம் இல்லை எனில் உங்கள் வாகனம் ஆஃப்-ரோடுகளை சமாளிப்பது மிகவும் கடினம்.

குறிப்பாக, சகதி நிறைந்த அல்லது கற்கள் நிறைந்த சாலைகளை சமாளிக்க இந்த அம்சம் கட்டாயமாகப் பார்க்கப்படுகின்றது. மேலும், உங்கள் வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சற்று பெரிய உருளை இருக்கும் எனில் அதை உங்கள் காரின் டயர் வேண்டுமானால் கடந்துவிடும்.

ஆனால், வாகனத்தின் அடிப்பகுதியில் சென்று அது சிக்க நேரிட்டால், கீழ் பாகம் கடுமையான சேதங்களுக்கு ஆளாக நேரிடும். அதுவே, கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பின் பெரிய பெரிய உருளை கற்களைகூட அது சமாளித்துவிடும். இதேபோல் நீர் நிறைந்த சாலைகளையும் அது சமாளித்துவிடும்.

அதிகபட்சம் உங்கள் வாகனம் 37 இன்ச் வேடிங் திறன் கொண்டதாக அது இருத்தல் வேண்டும். இந்த வசதிகளைக் கொண்ட கார்களே மஹிந்திரா தார், சுஸுகி ஜிம்னி மற்றும் போர்ஸ் கூர்கா ஆகியவை ஆகும். இதுபோன்று இன்னும் பல கார்கள் ஆஃப்-ரோடு வசதிக் கொண்டவை இருக்கின்றன.

வாகனங்கள் சிக்கலில் சிக்கிவிட்டால் என்ன செய்வது? ஆஃப்-ரோடு வாகனங்கள் பெரும்பாலும் சிக்கலில் சிக்குவதில்லை. ஆனால், ஆஃப்-ரோடு டிராவலுக்கு புதியவராக இருப்பின் எந்த மாதிரியான வாகனமாக இருந்தாலும் சில நேரங்களில் அது சிக்கலில் நேரிடும். அவ்வாறு வாகனம் சிக்குமெனில் முடிந்த அளவு அதை மீட்க முயற்சி எடுக்க வேண்டும். அதேவேளையில், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மேலும் சிக்கல்களை தீவிரப்படுத்தும் எனில் தயவுசெய்து அடுத்தகட்ட நடவடிக்கையை தவிர்த்துவிடுங்கள். அது காரை மீட்கவே முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

தனியாக பயணித்தல் கூடாது: ஆஃப்-ரோடு டிராவலின்போது தனியாக பயணிப்பது நல்ல ஐடியாவாக இருக்காது. நாம் ஏதேனும் சிக்கலில் சிக்க நேரிட்டால் அந்த நேரத்தில் உடன் வருபவர்களின் மிகப் பெரியதாக இருக்கும். அதேவேளையில், ஆஃப்-ரோடு டிராவலை மிகுந்த சுவாரஷ்யமானதாக்க வேண்டும் என்றால் இன்னும் சிலர் இருந்தால் மட்டுமே முடியும். எனவேதான் ஒரு பட்டாளமாக இதுமாதிரியான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஆஃப்-ரோடு டிராவலுக்கு முன்னர் சில விஷயங்களை தெரிந்துக் கொள்வது அவசியம்: முக்கியமாக நம்முடைய கார் அல்லது பைக் ஆஃப்-ரோடு டிராவலின்போது சிக்க நேரிட்டால் எப்படி அதில் இருந்து வாகனங்களை மீட்க வேண்டும் என்கிற கற்றலை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது தெரியாமல் இருப்பதாலேயே பலர் மிகப் பெரிய ஆபத்தில் சிக்க நேரிடுகின்றனர்.

இது தெரியாமல் வாகனங்களை இயக்குவது என்பது ஆழம் தெரியாமல் கிணற்றில் காலை விடுவதற்கு சமம் ஆகும். எனவேதான் முன் அனுபவம் உள்ள ஆஃப்-ரோடு டிராவலர்கள் அல்லது கைடுகளிடம் சில முக்கிய டிப்ஸ்களைக் கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது. அவர்கள் வாயிலாக நீங்கள் ஒரு ப்ரோ ரைடராக மாறலாம்.

வேகமாக வாகனத்தை இயக்கலாமா? பைக்கோ, காரோ ஆஃப்-ரோடு டிராவலின்போது அதிக வேகம் கூடவே கூடாது. குறிப்பாக, கரடு முரடான பாதைகளில் பயணிக்கும்போது கொஞ்சம் பொறுமையாக பயணிப்பதே நல்லது. அதேவேளையில், ஏற்றம் நிறைந்த பாதைகளில் கட்டாயம் அதிக த்ரோட்டிலை கொடுக்க வேண்டும் என இருந்தால் மட்டும் எஞ்சினை நன்றாக உறும செய்து முன்னேறலாம். மற்றபடி வாகனத்தை எந்த நேரத்திலும் அதிக வேகத்தில் இயக்கிவிட கூடாது.

தண்ணீர் நிறைந்த பகுதிகள் மற்றும் மணல் பாங்கான சாலைகளை தவிர்க்கவும்: தண்ணீர் நிறைந்த பகுதிகளில் பயணிக்கின்றீர்கள் என்றால் தயவுசெய்து அந்த பாதையை தவிர்த்துவிட்டு வேறு பாதை இருக்கின்றதா என்று பாருங்கள். குறிப்பாக பரீட்சையம் இல்லாத இதுமாதிரியான பாதைகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டாம் என்பதே எங்களின் அட்வைஸ் ஆகும். பலர் இந்த மாதிரியான இடங்களில் மிகப் பெரிய ஆபத்தையும், சிக்கலையும் சந்தித்தித்து இருக்கின்றனர்.

ஆஃப்ரோடு பயணங்களுக்கு முன்னர் சில மாற்றங்கள் அவசியம்: ஆஃப்ரோடு பயணத்தைத் தொடங்கு முன்னர் உங்கள் வாகனத்தை அதற்கேற்றதாக மாற்றிவிடுவதே நல்லது. வாகன உற்பத்தியாளர்கள் என்னதான் ஆஃப்-ரோடு டிராவலுக்கு உகந்ததாக கார்களை தயாரித்து இருந்தாலும், சந்தையில் அதைவிட பெஸ்ட்டான அணிகலன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *