பானை போன்ற தொப்பையையும் எளிதில் கறைக்கும் 6 பானங்கள்.. சீக்கிரமே ரிசல்ட் கிடைக்கும்..!
தங்களுக்கு இருக்கும் தொப்பையை குறைப்பது தான் உண்மையில் பலருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. உடலின் எந்த பகுதியில் இருக்கும் கொழுப்பு மற்றும் சதையையும் ஓரளவு முயற்சி செய்தால் நம்மால் குறைக்க முடியும்.
ஆனால் வயிற்றில் உருவாகும் தொப்பை மற்றும் இடுப்பின் இருபுறமும் குவிந்திருக்கும் சதையை குறைப்பது உண்மையில் பெரும் சவால் தான். எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் கூட அவ்வளவு எளிதில் குறையாத ஒன்று தொப்பை. எந்த ஒரு பானமும் தொப்பையை மேஜில் போல் சீக்கிரம் கரைக்க உதவாது. ஆனால் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படும் ஒருசில பானங்களை சீரான ஆரோக்கிய டயட் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் சேர்த்து தொடர்ந்து குடித்து வருவது தொப்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த எடை இழப்புக்கு உதவலாம்.
இஞ்சி டீ: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட அற்புத பொருளாக குறிப்பிடப்படும் இஞ்சியில் தேநீர் தயாரித்து பருகுவது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இந்த பானத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளை கொண்ட கலவைகள் உள்ளதாக ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டாக்டர் குடே பேசுகையில், இஞ்சி டீ-யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதோடு கலோரி எரிக்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது என்றார்.
கற்றாழை ஜூஸ்: கற்றாழையானது செரிமான நன்மைகளை கொண்டிருக்கிறது. எனினும் ஆற்றல்மிக்கது என்பதால் இதனை மிதமான அளவில் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
வெள்ளரி புதினா தண்ணீர்: வெள்ளரி மற்றும் புதினாவை இனிப்பு ஏதும் சேர்க்காமல் தண்ணீரோடு மிக்ஸ் செய்து குடிப்பது உடலை ஹைட்ரேட்டாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. டாக்டர் குடே பேசுகையில் வெள்ளரி மற்றும் புதினா கலந்த நீர் புத்துணர்ச்சியூட்டுவதோடு, லோ-கலோரி ஹைட்ரேஷன் பானமாக இருந்து திருப்தி உணர்வை ஊக்குவிக்கிறது என்றார்.
ஆப்பிள் சிடர் வினிகர் (ACV) பானம்: ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் நன்கு மிக்ஸ் செய்து நீர்த்து போக செய்து, சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் பருகவும். சில ஆய்வுகள் இந்த பானம் உடலில் சேர்ந்திரும் கொழுப்பை குறைக்க உதவும் என்று கூறுகின்றன. இதை ஆமோதித்துள்ள டாக்டர் குடே ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் நன்கு நீர்த்து போக செய்து அதனை பருகுவது பசியை குறைக்கும் மற்றும் கலோரி நுகர்வை கட்டுப்படுத்தும் என குறிப்பிட்டார்.
இலவங்கப்பட்டை தேநீர்: இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தேவையற்றதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கும் என்று குமாரி குறிப்பிட்டார்.
ஃபெனல் சீட் இன்ஃப்யூஷன் (பெருஞ்சீரகம் விதை இன்ஃப்யூஷன்): பெருஞ்சீரகம் விதைகள் லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருக்கலாம் மற்றும் செரிமான நன்மைகளுக்காக இதனை தேநீராக தயாரித்து பருகலாம்.
இதற்கிடையே ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த கிரீன் டீ குறித்து பேசிய டாக்டர் குடே, இதில் கேடசின்கள் உள்ளன. எனவே கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம், இவற்றை தொடர்ந்து பருகுவது காலப்போக்கில் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன என்றார். அதே போல குறைந்த கலோரி மற்றும் வைட்டமின் சி-க்கு பிரபலமாக இருக்கும் லெமன் வாட்டர் செரிமானம் மற்றும் சிறந்த வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் என்றார். மேற்கண்ட பானங்கள் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் அதே நேரம் இவற்றை சீரான டயட் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்ற டாக்டர் குடே அறிவுறுத்தி உள்ளார். குறிப்பிடத்தக்க டயட்மாற்றங்களைச் செய்வதற்கு முன் உரிய சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பதும் அவசியம் என்றார்.