நிமிடத்தில் இட்லி பொடி.. ஒருமுறை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க.!

இட்லி பொடி என்பது மிளகாய், பருப்பு ஆகிய பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவையான தென்னிந்திய உணவாகும். இதை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் மினி இட்லியை நெய் விட்டு இட்லி பொடியில் பிரட்டி தாளித்து சாப்பிடப்படும் பொடி இட்லியில் கிடைக்கும் சுவையே தனிதான்.

பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் உள்ள சமையலறைகளிலும் இந்த இட்லி பொடி கட்டாயம் இடம் பெற்றிருக்கும். இட்லிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் அரைக்க நேரமில்லாத சமையத்தில் சமாளிக்க உதவியாக இருக்கும்.

அப்படிப்பட்ட சுவையான இட்லி பொடியை வீட்டில் எளிதான செய்முறையில் உடனடியாக எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 10

குண்டூர் சிவப்பு மிளகாய் – 10

கடலை பருப்பு – 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 1/4 கப்

பொட்டு கடலை – 1/4 கப்

வேர்க்கடலை – 1/4 கப்

துருவிய தேங்காய் – 1 கப்

பூண்டு – தேவைக்கேற்ப

புளி – தேவைக்கேற்ப

பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 1/2 டீஸ்பூன்

கல் உப்பு – 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பிறகு வேர்க்கடலையை கடாயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

அடுத்து பொட்டு கடலையையும் சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்து வைத்துள்ள அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குண்டூர் சிவப்பு மிளகாய் மற்றும் காஷ்மீரி சிவப்பு மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயில் மீண்டும் நல்லெண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், பூண்டு மற்றும் புளியை சேர்த்து சேர்த்து வறுக்கவும்.

வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த மிளகாயை சேர்த்து பொடியாக அரைக்கவும்.

பின்னர் அதனுடன் வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

தற்போது கடைசியாக வறுத்து வைத்துள்ள தேங்காய், பூண்டு, புளி, கல் உப்பு, பெருங்காய தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.

அவ்வளவுதான் சுவையான கமகமக்கும் இட்லி பொடி தயார்…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *