அடுத்த இரண்டு ஆண்டுகள்…. மன்னர் சார்லஸ் தொடர்பில் எச்சரிக்கும் பல்வேறு ஜோதிட நிபுணர்கள்
சார்லஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய அரசகுடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து பல்வேறு ஜோதிட நிபுணர்கள் தங்கள் ஆழமான கருத்துகளை பதிவு செய்துவரும் நிலையில், ஒருவர் மட்டும் மன்னர் சார்லஸ் பதவி விலகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இழப்பை கொண்டுவரலாம்
மன்னர் சார்லஸ் தொடர்பில் பல்கேரியரான பாபா வங்கா மற்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என கொண்டாடப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salome ஆகியோர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
மேலும், மன்னர் சார்லஸின் இந்த நிலை அரச குடும்பத்திற்கு தாங்க முடியாத இழப்பை கொண்டுவரலாம் என்று Deborah Davies என்ற ஜோதிடர் எச்சரித்துள்ளார். மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானது சகோதரர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் மீண்டும் இணைவதற்கும் காரணமாக அமையும் என்றும் கணித்துள்ளார்.
பிப்ரவரி 5ம் திகதி திங்கட்கிழமை மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தான், பல ஜோதிட நிபுணர்கள் தங்கள் கணிப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
Deborah Davies என்ற ஜோதிடர் குறிப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு அரச குடும்பத்திற்கு மறக்க முடியாத ஆண்டாக மாறலாம். மன்னர் சார்லசின் உடல்நிலையால் அரச குடும்பம் பேரிழப்பை எதிர்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மன்னருக்கான கடமைகளை நிறைவேற்றும் பக்குவம் வேல்ஸ் இளவரசரை தவிர வேறு எவருக்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பகை மறந்து சகோதரர்கள் ஒன்றிணைவதுடன், நாம் எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் வில்லியம் மன்னராக முடி சூடுவார் என்றும் Deborah Davies குறிப்பிட்டுள்ளார்.
மன்னராக பொறுப்பேற்கலாம்
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என கொண்டாடப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salome ஏற்கனவே மன்னர் சார்லஸ் தமது உடல் நிலையில் அதிக கவனம் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார்.
எந்த சிக்கலும் இன்றி ஆட்சியை தொடர வேண்டும் என்றால் கட்டாயம் உடல் நிலையில் தனிக்கவனம் தேவை என்றும் அவர் எச்சரித்திருந்தார். தற்போதைய சூழலில், மன்னர் சார்லஸ் 2025க்குள் பதவியில் நீடிப்பாரா என்பது தொடர்பில் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
ஆனால் பிரான்ஸ் ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ் மட்டும், மன்னர் சார்லஸ் பதவி விலக நேரிடும் என்பதை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீதான நம்பிக்கை மிக அதிகம் என்றும், அவரது வயது தொடர்பான உபாதைகள் அவருக்கு எதிராக உள்ளது என்றும்,
தமது மகனுக்கு இளம் வயதிலேயே வாய்ப்பளிக்கும் வகையில், மன்னர் சார்லஸ் பதவி விலக ஒப்புக்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மன்னராகும் வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டவர், பிரித்தானியாவுக்கு மன்னராக பொறுப்பேற்கலாம் என்றும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.