ரூ.3 கோடி வென்ற இந்திய சிறுமி! 100 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் சாதித்தது எப்படி?
100 நாடுகளை சேர்ந்த 2,400 போட்டியாளர்கள் கலந்து கொண்ட போட்டியில் இந்திய சிறுமி ரூ.3 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
சர்வதேச அறிவியல் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் சர்வதேச அளவில் Breakthrough Junior Challenge International Science Video Competition என்ற போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியானது Breakthrough Prize Foundation சார்பில் நடத்தப்படும் போட்டி தொடரின் ஒரு பகுதியாகும்.
இந்த போட்டியை கூகுள் துணை நிறுவனர் Sergey Brin, பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg, அவரது மனைவி Priscilla Chan, ரஷ்யாவின் யூரி மில்னர், அவரது மனைவி ஜூலியா, அமெரிக்க தொழிலதிபர் Anne Ojcicki ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர்.
இந்த போட்டியானது துமையான சிந்தனை, தகவல் தொடர்பு திறன்கள், உயிர் அறிவியல், இயற்பியல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகள் தொடர்பாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2023 -ம் ஆண்டிற்கான இந்த போட்டியில் 100 நாடுகளை சேர்ந்த 2,400 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான இறுதி சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
ரூ.3 கோடி வென்ற இந்திய சிறுமி
இந்த போட்டியின் முதல் பரிசை இந்திய மாணவி சியா கோடிகா (Sia Godika) வென்றுள்ளார். இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். 17 வயதான Sia Godika 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் Sia Godika -வுக்கு 4 லட்சம் டொலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.32 கோடி ஆகும்.
இந்த போட்டியில் புதுமையான அறிவியல் சார்ந்த ஒன்றை வீடியோவாக உருவாக்க வேண்டும். இதில் சியா கோடிகா,நோபல் பரிசு பெற்ற ஷின்யா யமனகாவின் ப்ளூரிபோடன்ட் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் குறித்த விடயத்தை எடுத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, சியா கோடிகாவிற்கு 2.5 லட்சம் டொலர் மதிப்பிலான கல்லூரி ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. மேலும், இவரது அறிவியல் ஆசிரியர் ஆர்கா மவுலிக்கிற்கு 50000 டொலர் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சிறுமி படிக்கும் நீவ் அகாடமி பள்ளிக்கு 1 லட்சம் டொலர் மதிப்பிலான கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் லெபாரட்டரி வடிவமைத்த ஆய்வகம் கிடைக்கும்.