தந்தையைக் காண ஓடோடி வந்த இளவரசர் ஹரி… மகனுக்காக காத்திருந்த மன்னர் சார்லஸ்: நெகிழவைத்த அந்த தருணங்கள்
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் என தெரியவந்ததும், 5,000 மைல்கள் பயணித்து தந்தையைக் காண இளவரசர் ஹரி ஓடோடி வர, மன்னர் சார்லசோ, மகனுக்காக பொறுமையுடன் காத்திருந்த நெகிழவைத்த தருணங்கள் மீண்டும் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் அரங்கேறின.
கலைந்த குடும்பம்
தாத்தா பாட்டியும் பேரப்பிள்ளைகளும், அப்பாவும் பிள்ளைகளும், அண்ணனும் தம்பியும், அண்ணியும் மைத்துனரும் என, இளவரசர் பிலிப், மகாராணி எலிசபெத், மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் ஹரி, வீட்டுக்கு ஒரே செல்லப் பெண் இளவரசி கேட் என, திரைப்படத்தில் காட்டப்படும் குடும்பம்போல ஆனந்தமாக இருந்த குடும்பம், பிரித்தானிய ராஜ குடும்பம்.
ஆனால், என்று மேகன் மெர்க்கல் அந்தக் குடும்பத்தில் கால்வைத்தாரோ, அன்றே கும்பம் சின்னாபின்னமாய்ப்போனது.
ராஜ குடும்ப மரபுகளுடன் ஒத்துப்போக முடியாத மேகன் தினமும் ஒரு பிரச்சினையை உண்டுபண்ணிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ராஜ குடும்பத்தை விட்டும், பின் பிரித்தானியாவை விட்டும் ஹரியும் மேகனும் வெளியேற,
தாத்தா பாட்டிக்கும் பேரனுக்கும் இருந்த உறவு, அண்ணன் தம்பிக்குள் இருந்த உறவும், கூடப்பிறந்த சகோதரி போல் பழகிய இளவரசி கேட்டுடனான உறவு என அனைத்தும் பிளவுபட்டதுடன், ஹரி மேகன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, ஹரி எழுதிய புத்தகம் என எல்லா விடயங்களும் சேர்ந்து குடும்பத்தைக் கலைத்துப்போட்டன.
தன் தாய் மரணமடைந்தபோது ஓடோடி வந்து தன்னையும் தன் அண்ணனையும் சேர்த்துக்கொண்ட தாத்தா பிலிப் மரணமடையும்போதும் சரி, எத்தனை தவறுகள் செய்தாலும் மன்னித்து பேரனைக் காண ஆவலாக இருந்த எலிசபெத் மகாராணி மரணமடைந்தபோதும் சரி, ஹரி அவர்களுடைய கடைசித் தருணங்களில் ஹரி அவர்களுடன் இல்லை.
தந்தையைக் காண ஓடோடி வந்த மகன்
இந்நிலையில், தனக்கு புற்றுநோய் என மகன் ஹரியை அழைத்துச் சொல்லியிருக்கிறார் மன்னர் சார்லஸ். சொல்லப்போனால், ஹரிக்குதான் முதலில் மன்னர் இந்த தகவலைக் கூறியதாக கருதப்படுகிறது.
மேகன் என்ன செய்தாலும், மகன் மீதான அன்பு மட்டும் மன்னர் சார்லசுக்கு குறையவேயில்லை. வில்லியமை விட ஹரியுடன்தான் அவர் நெருக்கம் என்றும் கூறப்படுகிறது.
ஆக, தந்தை தனக்கு புற்றுநோய் என்று கூற, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை விட்டு விட்டு 5,000 மைல்கள் பயணித்து ஓடோடிவந்துள்ளார் ஹரி.
மகனுக்காக காத்திருந்த மன்னர்
இதற்கிடையில், மகன் வரும் தகவலறிந்து, மன்னர் சார்லஸ் அவருக்காக காத்திருந்தாராம். வழக்கமாக, மன்னர் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அப்படி காத்திருந்து, தனது அடுத்த நிகழ்ச்சி தாமதமாவதற்கு அவர் இதற்கு முன் அனுமதித்ததும் இல்லையாம்.
லண்டனிலுள்ள கிளாரன்ஸ் இல்லத்திலிருந்து மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் Sandringham எஸ்டேட்டுக்குப் புறப்பட இருந்த நிலையில், மகன் ஹரி வருவதாக தகவல் கிடைத்ததும், புறப்படத் தயாராக இருந்த ஹெலிகொப்டரை நிறுத்திவைத்துவிட்டு, மன்னர் மகனுக்காக காத்திருந்திருக்கிறார்.
தந்தையும் மகனும் 30 நிமிடங்களுக்கும் மேலாக அளவளாவிக்கொண்ட பின்னரே மன்னர் சார்லஸ் Sandringham எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மகாராணியார் மறைவுக்குப் பின் தனிப்பட்ட முறையில் மன்னரும் ஹரியும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்முறையாகும். மன்னர் மகனை சந்தித்துவிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் புன்னகையுடன் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆக, இது தந்தையும் மகனும் மீண்டும் ஒன்று சேருவதற்கு முதல் படியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.