நடுரோட்டில் நடந்த தகராறு! கிரீன் டீயால் சிக்கலில் மாட்டிய இயக்குநர் விஜய்.!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜயிடம் குடிபோதையில் தகராறு செய்து, ஓட்டுநரை தாக்கிய நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய், முதலில் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 2007ம் ஆண்டு வெளியான கிரீடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இன்று படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் காரில் சென்றுள்ளார். மேனேஜர் ஹரி மற்றும் உதவி இயக்குநரோடு போது, இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இளைஞர், கண்ணாடியை இடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய்யுடன் இருந்த நபர்கள், அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் மதுபோதையில் இருந்த நபர் இயக்குநர் விஜயின் மேனேஜர் ஹரியை ஹெல்மெட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்துள்ளனர் . ஆனால் அதற்குள் மது போதையில் தகராறில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜயின் மேனேஜர் ஹரி என்பவர் அளித்த புகாரின் பேரில் மது போதை நபரை இருசக்கர வாகன பதிவெண் வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே விஜய் கையில் வைத்திருந்த கிரீன் டீயை நெட்டிசன்ஸ் பலர் மதுபானம் என கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த விஜய், எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. அந்த கிளாஸில் கிரீன் டீதான் இருந்தது. அதுவும் தற்போது காவல் நிலையத்தில் இருக்கிறது. வேண்டுமானால் நான் அனைத்து பரிசோதனைக்கும் தயார் என தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *