அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அருகே KFC கூட கடையை திறக்கலாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்..

கடந்த மாதம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதை தொடர்ந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருவதால் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் பிரபலமான உணவுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் சுவையான சைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய உணவுகள் மட்டுமின்றி ராமர் கோயிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் டோமினோஸ் பீட்சா உணவகமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சா கடை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் அயோத்தியை சுற்றி 15 கி.மீ தொலைவு வரை அசைவ உணவு, மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக திறக்கப்பட்ட இந்த பீட்சா கடைகளில் சைவ வகை பீட்சாக்கள் மட்டுமே விற்கப்படுகின்றன.

அயோத்தியில் உள்ள அரசு அதிகாரியான விஷால் சிங் இதுகுறித்து பேசிய போது “அயோத்தியில் தங்கள் கடைகளை அமைக்க பெரிய உணவகங்களை இரு கரங்களுடன் வரவேற்கிறோம், ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாடு உள்ளது, அவர்கள் பஞ்ச் கோசி என்றழைக்கப்படும் புனித பகுதிக்குள் அசைவ உணவுகளை வழங்கக்கூடாது, ”என்று தெரிவித்தார். அசைவ உணவுகளை வழங்கும் உணவகங்கள் 14 கோசி பரிக்ரமா பகுதிக்கு வெளியே விற்பனை நிலையங்களை அமைத்துள்ளதாக சிங் கூறினார்.

மேலும் பேசிய அவர் “அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் KFC தனது கடையை அமைத்துள்ளது, ஏனெனில் நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால், கேஎப்சி நிறுவனத்துக்குக் கூட இடம் வழங்கத் தயாராக உள்ளோம்,” என்றார்.

மாநில அரசின் மதிப்பீட்டின்படி, ஏப்ரல் 17 ஆம் தேதி ராம நவமி வரை அயோத்தியில் வாரத்திற்கு 10-12 லட்சம் மக்கள் வருவார்கள் என்றும், அதன்பின்னரும் பார்வையாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைசாபாத் ஹோட்டல் சங்கத்தின் (FHA) தலைவர் ஷரத் கபூர் இதுகுறித்து பேசிய போது “ அயோத்திக்கு வரும் பார்வையாளர்களின் சுயவிவரம் கணிசமாக மாறிவிட்டது. முதல் சில நாட்களில், அண்டை மாவட்டங்களில் இருந்து தரிசனம் செய்ய வந்தவர்கள் இருந்தனர், ஆனால் இப்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் அயோத்திக்கு வருகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “இந்த மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதால், அவர்கள் பீட்சாக்கள் மற்றும் பர்கர்களை நன்கு அறிந்தவர்கள். எனவே, பீட்சாக்கள் மற்றும் பர்கர்களுக்கு பிரபலமான உணவு சங்கிலி கடைகள் இப்போது அயோத்தியில் தங்கள் கடைகளை அமைக்க முயற்சித்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

உத்திரபிரதேச மாநில தொழில் துறையின் மூத்த அதிகாரி அபிஷேக் சிங் பேசிய போது “ கோயில் திறக்கப்பட்ட பிறகு அயோத்தி சுற்றுலா எழுச்சி பெற்றுள்ளது. பிஸ்லேரி மற்றும் ஹல்டிராம் அயோத்தி போன்ற நிறுவனங்கள், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் பிரிவுகளை அமைக்க முன்மொழிந்துள்ளனர். இவை தவிர, பார்லே போன்ற பல நிறுவனங்கள் உணவுச் சங்கிலி விற்பனை நிலையங்கள், குறிப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர், பிஸ்கட் ஆகியவற்ற விநியோகம் செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *