தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி WTC புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், கடந்த 4ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. இதில் கேன் வில்லியம்சன் 118 ரன்கள் குவித்தார். ரச்சின் ரவீந்திரா 366 பந்துகளில் 240 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் குவித்தது.

இதன் மூலமாக 349 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு 528 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 247 ரன்கள் மட்டுமே எடுத்து 281 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திற்கு தள்ளபட்டது. மேலும், இந்தியா 3 ஆவது இடத்திற்கு சென்றது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *