இன்று பொதுத்தேர்தல், குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 08.02.2024 அன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல இடங்களில் குண்டுவெடிப்பு, வன்முறை சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் பல இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதனையடுத்து இன்று நடைபெற உள்ள தேர்தலை அமைதியாக நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.