இஸ்ரேல் போரை நிறுத்த மூன்று கட்ட செயல் திட்டம்
காசா பகுதியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த மூன்று கட்ட செயல் திட்டத்தை ஹமாஸ் இயக்கம் முன்வைத்துள்ளது.
மூன்றாவது கட்டத்தின் முடிவில் இஸ்ரேலுடன் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி முதல் கட்டத்தில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1500 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டால், ஹமாஸ் பிடியில் உள்ள 19 வயதுக்கு உட்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த அனைத்து பெண்கள், ஆண்கள், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இறந்தவர்களின் சடலங்கள்
இரண்டாவது கட்டத்தில், மீதமுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களும் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.