ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் சாப்பிடாதீர்கள்.., புற்றுநோயை ஏற்படுத்தும் அபாய எச்சரிக்கை

கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் ரோஸ் நிற பஞ்சு மிட்டாய்களை வாங்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பகுதிகளில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய்
புதுச்சேரி சுற்றுலா தலமாக விளங்குவதால் அங்கு விடுமுறை நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் செல்கிறார். அவர்களுக்கு அங்கு பலவிதமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

முக்கியமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோஸ் நிறத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வகையான பஞ்சு மிட்டாயை வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர். அவற்றை சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் வாங்கி உண்ணுகின்றனர்.

புற்றுநோய் எச்சரிக்கை
இந்நிலையில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இந்த பஞ்சு மிட்டாயைப் பரிசோதனை செய்ததில் அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அதை விற்று வந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த பஞ்சு மிட்டாயில் கார்சினோஜென் என்னும் ரசாயனமும், புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமியும் சேர்க்கப்பட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், குழந்தைகளுக்கு வாங்கித்தர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *