சொர்க்கத்திற்கு செல்ல வழி கூறுவதாக 191 குழந்தைகள் படுகொலை! மத வழிபாட்டுத்தலைவருடன் சிக்கிய 29 பேர்

கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், மத வழிபாட்டுத்தலைவர் மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

425 பேரின் உடல்கள்
கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடலோரப் பகுதியில் உள்ள Shakahola காட்டில் காணப்பட்ட 425 பேரில் 191 பேர் குழந்தைகள் ஆவர்.

பிரேத பரிசோதனையில் பெரும்பாலானோர் பசியால் இறந்ததாகவும், குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டோ, அடிக்கப்பட்டோ அல்லது மூச்சுத்திணறலாலோ உயிரிழந்ததாக தெரிய வந்தது.

Shakahola வனப்படுகொலை என்று அழைக்கப்படும் இந்த வழக்கு ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்தது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மத வழிபாட்டுத் தலைவர் Paul Mackenzie கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 29 பேரும் பொலிஸாரின் வலையில் சிக்கினர்.

உலகின் மிக மோசமான வழிபாட்டு முறை
அதனைத் தொடர்ந்து Malindi-யில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். Paul Mackenzie தன்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளையும், உலகம் அழியும் முன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக பட்டினி கிடந்தது இறக்குமாறு உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் விசாரணையை எதிர்கொள்ள மனதளவில் சரியாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.

முன்னர் டாக்சி ஓட்டுநராக இருந்த Paul Mackenzie மீது ஏற்கனவே பயங்கரவாதம், ஆணவக்கொலை மற்றும் குழந்தை சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இச்சம்பவம் சமீபகால வரலாற்றில் உலகின் மிக மோசமான வழிபாட்டு முறை தொடர்பிலான பேரழிவு என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *