பிக்பாஸில் ஐசுவிற்கு பிடித்த போட்டியாளர் நிக்ஷன் இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆறாவது வாரத்தில் வெளியேறிய ஐசு தனக்கு பிடித்த போட்டியாளர் பிரதீப் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது.
அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 23 போட்டியாளர்களில் ஐசுவும் அடங்குவர். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நிக்ஷனும் இவரும் காதலித்து வந்தனர். உள்ளே இருவரும் பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், நிக்ஷனுக்காக ஐஸு பல போட்டியாளர்களிடம் சண்டையுமிட்டார்.
இந்நிலையில் ஆறாவது வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். இந்நிகழ்ச்சியில் பிரதீப் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த நிலையில், இவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற அர்ச்சனா டைட்டில் வின்னராக வெற்றிக் கோப்பையை பெற்றார்.
ஐசுவின் கருத்தால் சர்ச்சை
இந்நிலையில் ஆறாவது வாரம் வெளியேற்றப்பட்ட ஐசு, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள காட்சியை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
அதில் பிக்பாஸ் வீட்டில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு அவர் பிரதீப் பெயரை கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பிரதீப் குறித்து அவதூறு பேசிவிட்டு வெளியே வந்ததும் அவரை பிடிக்கும் என்று நடிக்காதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.