பிரீத்தா விஜயகுமாரின் மாத வருமானம் இவ்வளவா? இவங்க என்ன வேலை செய்றாங்கனு தெரியுமா?
பிரீத்தா ஹரி நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் சொந்த பிஸ்னஸ் செய்து கலக்கி வருகிறார்.
பிரீத்தா ஹரி
பிரீத்தா ஹரி தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், இவர் நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார்.
இவர் இயக்குனர் ஹரியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
பிரீத்தா திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு மொத்தமாக விலகினார். இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் தற்போது தனது சொந்த பிஸ்னஸ் மூலம் பல இலட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
அதை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரீத்தா பேலஸ்
பிரீத்தா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி என்னும் பகுதியில் கல்யாண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்திற்கு பிரீதா பேலஸ் என பெயரிட்டுள்ளார்.
இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 350 முதல் 500 பேர் வரை ஒன்று கூடலாம். இந்த மண்டபத்தின் அருகில் உள்ள பகுதியில் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்னும் உணவகத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த உணவகத்தில் முழுமையாகவே பெண்கள் தான் வேலை செய்கிறார்களாம். இது ஈசிஆர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்த உணவகம் ஆரம்பித்த சில நாட்களில் பிரீத்தா இதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் ப்ரீத்தா ஹரி சென்னை சாலிகிராமத்தில் குட்லக் என்னும் பெயரில் டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்.