ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
காதல் கணவரை விவாகரத்து செய்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் சினிமாவிலும் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, முதலாவதாக தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கினார்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பேமஸ் ஆனது.
தற்போது காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, தற்போது தனது இயக்குனர் வேலையில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விக்ராந்த், விஷ்ணு விஷாலை வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் என்ற படத்தை இயக்கிவரும் நிலையில், இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.
சொத்து மதிப்பு
இயக்குனராக தற்போது கலக்கிவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா மட்டுமின்றி பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருந்து வரும் நிலையில் அதிலிருந்தும் வருமானம் வருகின்றது.
இயக்குனராக மட்டுமின்றி பாடகியாகவும், தன் திறமையை நிரூபித்துள்ள ஐஸ்வர்யா விசில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.