இறந்து போன முதல் மனைவி… நடிகர் பாக்கியராஜிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது யார்?
இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிகள் தங்களது திருமண புகைப்படத்தை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளனர்.
நடிகர் பாக்கியராஜ்
நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளால் தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பாக்கியராஜ் தற்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இவரது நடிப்பு மற்றும் இவர் இயக்கிய கதைகள் அனைத்தும் வெற லெவல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மனிதர்களின் தத்ரூபமான வாழ்க்கையை கதையாகவும், தனது எதார்த்தமான நடிப்பினாலும் இன்றும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றார்.
பாக்கியராஜின் முதல் மனைவி மரணத்திற்கு பின்பு, ஒரு ஆண்டு கழித்து 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.
40வது திருமணநாள்
பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிகளுக்கு திருமணமாகி தற்போது 40 ஆண்டுகளை கடந்துள்ளனர். இத்தருணத்தில் அவரது மனைவி பூர்ணிமா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆம் தங்களது திருமண புகைப்படத்தினை பதிவிட்டதுடன், 40 வருடத்தினை கடந்துள்ளதை மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காணப்படுகின்றனர்.
இவர்களின் திருமணத்தினை இவர்கள் தான் நடத்தி வைத்துள்ளார்களாம். பூர்ணிமா வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.