‘தோனி தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன்..’ – முகமது ஷமி பதில்
இந்திய அணியில் தோனிதான் சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன் என்று முகமது ஷமி கூறியுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற கேப்டனாக தோனி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2004 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான தோனி, தனது 16 ஆண்டு கால வாழ்க்கையில் 538 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இந்தியாவுக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஆகஸ்ட் 15, 2020 அன்று, தோனி இன்ஸ்டாகிராமில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. இரவு 7.29 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்” என்று தோனி தனது நகைச்சுவை உணர்வுடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் தோனிதான் வெற்றிகரமான கேப்டன். இந்திய அணியில் அவர் அளவுக்கு எந்த கேப்டனும் வெற்றி பெறவில்லை. என்று தெரிவித்தார்.
வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது சிகிச்சைக்காக முகமது ஷமி இங்கிலாந்தில் உள்ளார்.