90’ஸ் இளம் பெண்களின் கனவு நாயகனா இது..? இந்த படத்தில் இருக்கும் நடிகர் யாருனு தெரியுதா?

சினிமா பிரபலங்களின் குழந்தை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்த நடிகரின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

90களில் அதிக அளவிலான பெண் ரசிகர்களை கொண்டு சாக்லேட் பாயாக வளம் வந்த நடிகர் பிரசாந்தின் சிறுவயது புகைப்படம் தான் இது.

நடிகர் பிரசாந்த் தமிழில் ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் கால்பதித்தார்.

இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகனான நடிகர் பிரஷாந்த் 90 களில் டாப் நடிகராக வளம் வந்தவர்.

சிம்ரன், ஜோதிகா, கிரண், சினேகா, மற்றும் பல நடிகைகளுடன் சேர்ந்து நடித்துள்ள நடிகர் பிரஷாந்த் 90 களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் அப்போதே ஜோடி போட்டார் நடிகர் பிரஷாந்த்.

செம்பருத்தி, கிழக்கே வரும் பாட்டு, கண்மணி, ஆணழகன், ஜீன்ஸ், வின்னர் போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார் பிரஷாந்த்.

முன்னணி நடிகராக வலம் வந்த பிரஷாந்தின் மார்க்கெட் ஒரு கட்டத்திற்கு பிறகு முற்றிலும் சரிந்து விட்டது.

‘வின்னர்’ படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அடுத்தடுத்து படங்கள் பிளாப் ஆக தொடங்கியது.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் இவரின் சறுக்களுக்கு காரணமாக கூறப்பட்டது.

‘அந்தகன்’ படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுக்க நினைத்த பிரஷாந்திற்கு அதுவும் கைகொடுக்கவில்லை, படம் ரீலிஸ் தள்ளிபோய்க்கொண்டே இருப்பதால் இழந்த மார்க்கெட்டை இன்றளவிலும் அவரால் பிடிக்க முடியவில்லை.

தற்போது கிடைக்கும் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார் பிரஷாந்த்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *