அமுலுக்கு வந்த சென்னை எம்.சி சாலை போக்குவரத்து மாற்றம்..!
தமிழாக அரசின் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் மூலம் சென்னை, மதுரை போன்ற பெரும் நகரங்களில் புதிய சாலைகள் / மேம்பாலங்கள், பழைய கட்டிடங்களை மராமத்து செய்வது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த வரிசையில் சென்னையில் சாலை போக்குவரத்தில் முக்கிய பகுதியான எம்.சி சாலையின் சிமெட்ரி சாலை சந்திப்பில் இருந்து ஜி.ஏ சாலை சந்திப்பு வரை பாதசாரிகளுக்கு நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை மாநகராட்சி போக்குவரத்து துறை ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் படி, ஸ்டான்லி சுரங்கப் பாதையில் இருந்து எம்.சி சாலையினை நோக்கிச் செல்லும் வாகனங்களின் வழித்தடம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் ஜி.எ சாலையிலிருந்து எம்.சி சாலையினை நோக்கி செல்லும் வாகனங்களின் வழித்தடம் மேற்கு கல்மண்டபம் சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.