அசரவைக்கும் எல்ஐசி-யின் புதிய பாலிசி..! பொதுமக்களுக்கு சூப்பர் திட்டம்!
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆனது பல்வேறு பாலிசி திட்டங்கள் வழங்கி வருகிறது. அதனுடன் இன்டெக்ஸ் பிளஸ்’ என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC நிறுவனத்தின் இந்த இன்டெக்ஸ் பிளஸ் பாலிசி என்பது ஒரு யூனிட் இணைக்கப்பட்ட வழக்கமான பிரீமியம், தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது முழு பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சேமிப்பையும் வழங்குகிறது. பாலிசியின் கீழ் குறிப்பிட்ட பாலிசி வருடங்கள் முடிந்தவுடன் வருடாந்திர பிரீமியத்தின் சதவீதமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை யூனிட் ஃபண்டில் சேர்க்கப்பட்டு யூனிட் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.
அடிப்படை காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து பாலிசிதாரரின் அதிகபட்ச வயது 50 அல்லது 60 ஆண்டுகள் வரை இருக்கலாம். முதிர்ச்சியின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் (நிறைவு) மற்றும் முதிர்ச்சியின் அதிகபட்ச வயது 75 அல்லது 85 ஆண்டுகள் ஆகும். சம் அஷ்யூர்டு என்றால் காப்பீடு தொகை என்று பொருள். காப்பீட்டு பாலிசியை வாங்கும் போது அந்த காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரருக்குத் தீர்மானிக்கும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு இதுவாகும்.
90 நாட்கள் முதல் 50 வயது வரையிலான ஆண்டு பிரீமியத்தில் 7 முதல் 10 மடங்கு அடிப்படைத் தொகையும், 51 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்டு பிரீமியத்தில் 7 மடங்காகவும் இருக்கும். பாலிசி காலம் 10 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.