இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நாளை (பிப்ரவரி 9) தை அமாவாசை வர இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, வருகிற தை அமாவாசை அன்று பல்வேறு இடங்களிலிருந்து பெரும்பாலான மக்கள் புனித ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் வருகை தர வாய்ப்புள்ளதால், இரண்டு தினங்களுக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிப்.9-ம் தேதி தை அமவாசியை முன்னிட்டு, வருகிற (வியாழக்கிழமை) பிப். 8-ம் தேதியன்று சென்னை கிளாம்பக்கத்திலிருந்தும் சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப். 9-ம் தேதியான தை அமாவாசையன்று சென்னை கிளாம்பக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.